Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் பலி - மூவர் காயம்

கொழும்பு - கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரான்ட்பாஸ் - வெஹெரகொடல்லே – கம்பித்தொட்டுவ பகுதியில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 46 வயதான இந்திரஜித் சுகத் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments