Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறிலங்காவில் ஒருவர் பலி! பலர் பாதிப்பு! இதுவரை 74 பேர் கைது!

மினுவாங்கொட உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் இதுவரை 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 14 பேர் மினுவாங்கொடயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.
வடமேல் மாகாணத்தின் சில இடங்களில் நேற்றும் நேற்று முன்தினமும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் நாத்தாண்டிய - கொட்டாரமுல்ல பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது 49 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இஹல கொட்டாரமுல்ல, மொரகலை பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 54 வயதான ஒருவர் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வாறியபொல, ஹெட்டிபொல உள்ளிட்ட சில இடங்களில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
நிகவெரட்டிய நகரில் சிலர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மினுவாங்கொட நகரில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments