Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் 18 முகாம்கள் - 5 முகாம்களில் நேரடி ஆயுதப் பயிற்சி


இஸ்லாமிய அடிப்படைவாத தலைவரான சஹ்ரான் ஹசிம் இலங்கையில் 18 பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்தி வந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
சில முகாம்களில் இஸ்லாம் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒரு முகாமில் அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொண்ட 10 முதல் 20 பேர் வரை பயிற்சி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவனெல்லை, கம்பளை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, வண்ணாத்துவில்லு, காத்தான்குடி உட்பட பல பிரதேசங்களில் இந்த முகாம்கள் இயங்கி வந்துள்ளன. 5க்கும் மேற்பட்ட முகாமில் நேரடியாக ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது கிடைத்துள்ள புலனாய்வு தகவல்களுக்கு அமைய மேலும் முகாம்கள் இயங்கி வருகின்றனவா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் தேடி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments