Home » » 1 கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் கல்முனைக்குடி – தைக்கா வீதி காபட் வீதியாக புனருத்தானம்.

1 கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் கல்முனைக்குடி – தைக்கா வீதி காபட் வீதியாக புனருத்தானம்.


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவபிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலிலும் , நெடுஞ்சாலைகள் , வீதிஅபிவிருத்தி , மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் காசிம் அவர்களின் நிதிஒதுக்கீட்டிலும் மனங்களை இணைக்கும் ” ரண் மாவத் ( தங்கப் பாதை ) திட்டத்தின் கீழ் காபட்இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவிருக்கும்கல்முனை  பிரதேச செயலகப்பிவிற்குட்பட்ட கல்முனைக்குடி   ” தைக்கா வீதியின் நிர்மாணப்பணிகளை உத்தியோக புர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு  அண்மையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் .எல்..பாரிதலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சிஅமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழு இணைத்தலைவருமான சட்டத்தரணிஎம்.எஸ்.அப்துல் றஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெயர்ப்பலகையினை திரை நீக்கம்செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று – கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதமபொறியியலாளர் எம்.பி.அலியார் , அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி இளைஞர்அமைப்பாளர் .எச்.எச்.எம்.நபார்  உள்ளிட்ட ஐக்கிய தேசியகட்சியின் முக்கியஸ்தர்கள் , பிரதேசமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சுமார் 1050 மீற்றர் நீளமான இவ்வீதிக்கு 1 கோடியே 70 இலட்சம்  ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |