Home » » மீண்டும் உலகை உலுக்கிய மாபெரும் கொடுமை; வீதி வீதியாக கதறிய மக்கள்!

மீண்டும் உலகை உலுக்கிய மாபெரும் கொடுமை; வீதி வீதியாக கதறிய மக்கள்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிபத்திற்கு உள்ளாகி பேரழிவைச் சந்தித்துள்ள பழமையான ’நோட்ரே டேம் கேதட்ரல் (Notre-Dame-de)’ தேவாலயமானது மாபெரும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாக விளங்குகின்றது.
இதன் வரலாற்றுப் பின்னணி குறித்து வெளியான தகவலின்படி,
1163 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதுவும் Maurice de Sully பேராயரின் பெரும் அழுத்தத்தின் பேரில், போப்பாண்டவர் அலெக்சாண்டர் III முன்னிலையில் இந்த அடிக்கல் நாட்டப்பட்டது.
தொடர்ச்சியாக இரண்டு நூற்றாண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக இந்தத் தேவாலயம் பல சோதனைகளைச் சந்தித்தாலும், பரிஸ் மக்களின் சாட்சியமாக எட்டு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது.
இதற்கு முன்னர், முக்கிய தேவாலயாக விளங்கிய Saint-Etienne தேவாலயம், பெருந்திரளான மக்களை உள்ளடக்க முடியாமல் திணறிய நிலையில், பெருந்தொகையான மக்கள் வாழ்ந்து வந்த பரிஸ் நகரத்தில் நோத்ர-தாம் தேவாலயத்தைக் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1200 ஆம் ஆண்டில் இருந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கிய பரிஸ் நகரத்தில், 200000 மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மிகவும் பெரிய சனத்தொகை என்பதால் இது இங்கு கட்டப்பட்டது.
1804ஆம் ஆண்டிலிருந்து இருந்து, அதாவது, நெப்போலின் காலத்தில் இருந்து மிகவும் பிரபல்யம் அடைந்த இந்தத் தேவாலயம், இன்று மில்லியன் கணக்கிலான உல்லாசப் பயணிகளை ஈர்த்து வந்துள்ளது.
இந்த பின்னணியில் மிகப்பெரும் வரலாற்றுப் பின்னணியைக்கொண்ட இந்த தேவாலயத்தின் பேரழிவால் பாரிஸ் மக்கள் பலரும் வீதியில் நின்று கதறியழுத சம்பவம் உலக மக்களையே உலுக்கியுள்ளது.







Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |