Advertisement

Responsive Advertisement

முன்னாள் போராளிகளை இனியாவது நிம்மதியாக வாழவிடுங்கள்!

தாமுண்டு தம் வேலையுண்டு என வாழும் முன்னாள் போராளிகளை இனியாவது நிம்மதியாக வாழவிடுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு வவுணதீவு பொலிஸ் அரணில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தனர் . அதில் ஒருவர் தமிழர். மற்றவர் சிங்களவர். மிகவும் பரிதாபகரமான கொலைச் சம்பவம்.
அதில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் என் கடந்த கால மாணவனும் கூட . இந்த கொலைச் சம்பவத்தில் குறிப்பாக முன்னாள் போராளிகளும், தமிழர்களும் அதி தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுமுள்ளார். அவரது மனைவி, பிள்ளைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு இருந்தார். அந்தக் குடும்பம் இன்று வரை சொல்லொணாத் துயரை அடைந்து வருகிறது .
இப்போது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் குழுவைச் சேர்ந்த சிலரே இதைச் செய்துள்ளதாக தெரிய வருகிறது . குறிப்பாக தற்கொலை குண்டுதாரிகளின் தலைவரான சஹ்ரான் என்பவரின் சாரதியும் , அவர் உட்பட்ட குழுவினருமே இதைச் செய்ததாக கூறப்படுகிறது .
தமிழர்கள் செய்து இருந்தால் அடுப்படியையும் தோண்டுவீர்கள். இத்தகைய சம்பவத்தின் பின், இந்நிலையில் அரசு
பொலிஸாரின் கொலையோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் .
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்ட வேண்டும் .
உட , உள ரீதியாக பாதிக்கப்பட்டு நிற்கும் குடும்பத்துக்குரிய சகல நீதி நியாயம் வழங்கப்படுவதுடன், நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் .
இதில் தாமதிப்புக்களை மேற்கொள்ளக் கூடாது . இனியாவது தமிழர்களை சந்தேக கண் கொண்டு பார்க்கும் நிலை நீங்க வேண்டும் . இயல்பு நிலைக்கு திரும்பி, தானும் தன் பாடும் என்று வாழும் முன்னாள் போராளிகளை நிம்மதியாக வாழ விட வேண்டும் . எதற்கு எடுத்தாலும் தமிழர்களை மட்டும் சந்தேகப்படும் நிலையே இன்று இத்தகைய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. இனியாவது அரசு உணர்ந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். .

Post a Comment

0 Comments