உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 20ஆம் திகதி கிழக்கு உட்பட இலங்கையின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு ஒத்திகை பார்க்கும் வகையிலேயே காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளொன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முக்கிய கேந்திர நிலையமான காத்தான்குடியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள போதும் இதற்கு அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அத்தோடு தற்போதைய ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கடந்த காலங்களில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது வெளிப்படையாகவே இரத்த ஆறு ஓடும் என கூறியிருந்தார்.
அப்படியெனில் அவர் ஓடுவதாக கூறிய இரத்த ஆறு இலங்கையில் ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற குறித்த சம்பவங்களா?
2017ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இரத்த ஆறே ஓடும்! நாடாளுமன்றில் எச்சரித்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
0 Comments