Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு


இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் அனோனிமெஸ் என்று அறியப்படும் இந்த குழு வெளியில் புலப்படாமல் செயற்படுவதால், அநாமதேயமான குழு என்று அறியப்படுகிறது.
அனானி என்று தமிழில் பெயர்படுத்தப்படும் இந்த குழுவை பல்வேறு தரப்பினரால் இணையவழி தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்ற போதும், உலகெங்கிலும் இந்த குழுவுக்கு ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு டைம்ஸ் இதழ் இந்த குழுவினரை உலகில் மிகவும் அதிகாரச்செல்வாக்கு மிகுந்த 100 பேருக்குள் இணைத்திருந்தது.
இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை எச்சரிக்கும் வகையில் தகவல் அனுப்பியுள்ள அனானி குழு, ஐக்கியப்படுவதற்கான காலம் வந்திருப்பதாகவும், ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments