பண்டிகைக் காலத்தின் பின்னர் கொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று போக்குவரத்து அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபை, ரயில்வே திணைக்களம், பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை இணைந்து பயணிகளுக்கு மிகச் சிறந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டு வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை அமுலில் இருக்கும். இதன் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த 1இ350 பஸ் வண்டிகள் தூர இடங்களில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. சுமார் 3 ஆயிரம் தனியார் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இவற்றுக்கு அப்பால் எதிர்வரும் சனிஇ ஞாயிறுஇ திங்கள் ஆகிய தினங்களில் 11 விசேட ரயில் சேவைகள் நடத்தப்பட உள்ளன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வழியாக கொழும்பு வரும் வாகனங்களை அத்துருகிரிய, கஹதுடுவ முதலான இடம்மாறல் நிலையங்களில் இருந்து வெளியேறச் செய்து, கொழும்பு நோக்கிய பயணத்தை தொடரச் செய்வது என தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். கொட்டாவ நுழைவாயிலில் வாகன நெரிசலைத் தடுப்பது இதன் நோக்காகும். -(3)

0 Comments