Advertisement

Responsive Advertisement

தெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா? : (PHOTOS)


இலங்கைக்கு தெற்கே கடல் பகுதியில் ஹெரோயினுடன் பிடிக்கப்பட்ட கப்பலுக்கும் டுபாயில் கைதாகியுள்ள மாந்துர மதுஷுக்கும் இடையே தொடர்புகள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இன்று அதிகாலை கடல்பகுதியில் குறித்த கப்பலை சுற்றி வளைத்த போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் அதிலிருந்து 100 கிலோ ஹெரோயினுடன் 7 ஈரானியர்களை கைது செய்திருந்தனர்.

இதன்போது அந்த கப்பலிலில் 600 கிலோ வரையான ஹெரோயின் இருந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன் அவற்றில் 100 கிலோ கடலில் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த கப்பல் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் ஊடாக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் இதனுடன் மாகந்துர மதுஷின் தொடர்புகள் இருந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. -(3)2 6

Post a Comment

0 Comments