ஆறு மாத சிறைத்தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர், கைதி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வவுனியா நீதிமன்றிற்கு வழக்கு நடவடிக்கைகளுக்காகச் சென்ற நபர், நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு குழப்பத்தை விளைவித்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டது.
|
நீதிமன்ற சிறைக்கூண்டுக்குள் பொலிஸாரால் அவர் அடைக்கப்பட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டு வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவர் தனது பையிலிருந்து பிளேட்டால் கழுத்தை அறுத்துக் கொண்டார் என்று தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
|
0 Comments