Home » » 9 மாவட்டங்களுக்கு அதிதீவிர எச்சரிக்கை!

9 மாவட்டங்களுக்கு அதிதீவிர எச்சரிக்கை!

கடுமையான வெயில் காரணமாக அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை ஒன்பதாக, அதிகரிக்கப்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது ஒன்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புத்தளம், குருணாகல் மாவட்டங்களுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை,மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பநிலை நிலவுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது மாவட்டங்களினதும் வெப்பநிலை 32 முதல் 41 டிகிரி வரை அதிகரிக்கப்படலாமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர உஷ்ண நிலை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் Sun Stroke (பக்கவாதம்) போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் தேவையானளவு நீர் அருந்துவதுடன் நிழலான இடங்களில் இருக்க வேண்டுமென்றும் வயதானவர்கள் மற்றும் நோயாளர்களிடத்தே கூடுதல் கவனம் தேவையென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் குழந்தைகளை மூடிய வாகனத்தில் தனித்துவிட்டுச் செல்லக்கூடாது என்றும் வெட்டவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |