Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து பெற்று அழிக்க நடவடிக்கை!

இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது பயன்பாட்டிலுள்ள two stroke இயந்திர முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்று அழிக்கவோ அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள அனுப்பி வைக்கவோ திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க கூறியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments