Home » » யாழில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை மக்கள் கையளிக்க சந்தர்ப்பம்

யாழில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை மக்கள் கையளிக்க சந்தர்ப்பம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 40ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள் வந்து வழங்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.மேலும் மக்களின் கோரிக்கைகளை சேகரிப்பதற்கு தனியான அமைப்பொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமெனவும் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.(15)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |