Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தவறு எங்கே நடந்தது? நாய்களுக்கு இரையான பச்சிளம் குழந்தை!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள மாமிடிபாளையம் ஏரிக்கரை அருகே சில நாய்கள் ஏதோ மாமிசத்தை தின்று கொண்டிருந்தன. இதை பார்த்தவர்கள் நாய்களை விரட்டிவிட்டனர்.
பின்னர் அருகில் சென்று பார்த்தபோது நாய்கள் தின்றது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் என்பதை அறிந்து அதிர்ந்து போயினர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், நாய்கள் தின்றது போக எஞ்சி கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பச்சிளம் குழந்தையை பெற்றோர் வேண்டாம் என வீதியில் வீசி சென்று, நாய்கள் குழந்தையை கடித்து கொன்றதா? அல்லது இறந்து போன குழந்தையை புதைக்காமல் அலட்சியமாக வீதியில் வீசி சென்றார்களா? என்ற கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments