Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரச அதிகாரிகள் தமது சொந்த இடங்களிலேயே கடமையாற்ற வேண்டும்!

கிழக்கு மாகாணத்தில் விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட 12 தொழிநுட்ப உதவியாளர் பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தலமையில் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட தொழிநுட்ப உதவியாளர் நியமனங்களை நிரப்பும் வகையில் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தி பெற்ற 12பேருக்கான நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை.சலீம் உள்ளிட்ட கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
குறித்த நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது ஆளுநர் பதவிக்காலத்தில் அரச அதிகாரிகள் தமது சொந்த இடங்களிலேயே கடமையாற்ற வேண்டும் என்பதனை தான் விரும்புவதாக குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments