Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்க உறுதி!

ஜெனிவா பிரேரணை குறித்துஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்க உறுதியாக உள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று பயணம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
“கடந்தகால யுத்தத்தினால் பாதிப்புற்ற இலங்கையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடினேன். அவர்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வுகளுக்கு முயற்சிக்க வேண்டும். யாழ்ப்பணத்திற்கு தொடர்ந்தும் பயணங்களை மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று அலைனா பீ.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பலாலியில் புதிதாக விடுவிக்கப்பட்ட நிலங்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் அவர், யாழ்ப்பாண சமூகங்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் முகமாக மிகுதி காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments