Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முன்னால் சென்ற மாணவியை காப்பாற்ற முயன்று மாணவியுடன் ரயிலில் மோதி பலியான மாணவன்


15 வயது மாணவியொருவரும் மற்றும் 16 வயது மாணவன் ஒருவரும் இன்று காலை நாவலப்பிட்டி ஜயசுந்தர பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.

தனக்கு முன்னால் சென்ற மாணவியை காப்பாற்ற சென்ற வேளையிலேயே மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவனும் இன்னுமொரு மாணவியும் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு முன்னால் இன்னுமொரு மாணவி தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது கொழும்பு கோட்டையிலிருந்து எல்லை நோக்கி சென்ற கடுகதி ரயில் வந்துள்ள நிலையில் அந்த மாணவன் தன்னுடன் வந்த மாணவியை தண்டவாளத்திலிருந்து பாதுகாப்பாக வெளியே தள்ளிவிட்டு முன்னால்  சென்ற மற்றைய மாணவியை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

இவ்வேளையில் அவர்கள் இருவரும் ரயிலில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments