Home » » கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம்

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தர  கணித  , விஞ்ஞான , கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்திருந்த அந்த குழு மாணவர்களுக்கான இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம் கல்முனை டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  இன்று  ( 3 ) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பொது வைத்தியம் , கண் பரிசோதனை , ஈ.சீ.ஜீ. பரிசோதனை , இரத்தப் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.





இக்குழுவில் கல்வி கற்ற உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் , இப்பிரதேசத்தின் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் , பல்துறை நிபுணர்கள் , வங்கி உத்தியோஸ்தர்கள் , தபால் திணைக்கள அதிகாரிகள் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , தொழில் அதிபர்கள் , தனியார் நிறுவன உத்தியோஸ்தர்கள் , அரச உத்தியோஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |