சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழர் குடியிருப்பொன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
களுத்துறை, மில்லகந்த திப்பட்டா தோட்டத்தில் உள்ள தமிழ் மக்கள்மீதும் அவர்களது குடியிருப்பு மீதும் இந்த தாக்குதல் பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும் தாக்குதலாளிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை ஏதும் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக வெளியில் உலாவித் திரியவா இந்த சுதந்திர தினம்? என்று பலரும் தமது விசனங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகின்றனர்.
0 Comments