Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் பதற்றம்! பிரபல ஊடக நிறுவனத்தில் முற்றுகை!

தேசிய ரூபவாஹினியின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நீக்குமாறு கோரி ரூபவாஹினி தலைவர் இனோகா சத்தியாங்கனியின் அலுவலக அறையை பணியாளர்கள் தற்போது சுற்றிவளைத்துள்ளனர்.
நீண்ட காலமாக பணியாளர்கள், சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நீக்குமாறு கோரி முன்வைத்த கோரிக்கையை புறக்கணித்தமை காரணமாக பிற்பகல் 1.30 மணியளவில் தலைவரின் அலுவலக அறையை சுற்றிவளைத்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
குறித்த கோரிக்கையை முன்வைத்த ரூபவாஹினி தொழிற்சங்க உறுப்பினர்கள் 21 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமையே ஆர்ப்பாட்டத்திற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதை சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அதிக சம்பளத்தின் கீழ் ரூபவாஹினிக்கு நியமிக்கப்பட்டுள்ள போதும், அவரால் நிறுவனம் வங்குரோத்து ஆகியுள்ளதாக பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments