Home » » தபால் சேவைக்கான செலவு இரட்டிப்பாக அதிகரிப்பு!

தபால் சேவைக்கான செலவு இரட்டிப்பாக அதிகரிப்பு!

மக்கள் பிரதிநிதிகளின் தேவைகையைக் கருத்திற் கொண்டு தபால் சேவைக்கான செலவை இரட்டிப்பாக அதிகரிகாணப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் தேவைகையைக் கருத்திற் கொண்டு தபால் சேவைக்கான செலவை இரட்டிப்பாக அதிகரித்துள்ளமை அரசியல் நோக்கத்திற்காக அல்ல தபால் சேவையின் மூலமாக மக்களுடைய தேவைகள் அதிகளவு நிறைவேற்ற வேண்டியுள்ளன. அந்தவகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தபால் சேவைக்கான செலவை இரட்டிப்பாக அதிகரிக்க முடிந்துள்ளது எனவும் தேசிய அரசாங்கம் என்ற தப்பான விசயங்களை விமர்சிப்பதை விடுத்து அதிலுள்ள நல்ல விசயங்களைப் பற்றிக் கருத்திற் கொள்ளுதல் வேண்டும் என்று முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் கம்பெரலிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான மதிப்பீட்டு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கின்ற ஆலோசனைக் கூட்டம் கட்டுகஸ்தொட்டை ரிவடெல் ஹோட்டலில் முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
நான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் அமைச்சரவின் அங்கீகாரத்தைப் பெற்று இந்த சேவையை இரு மடங்காக கூட்டியிருக்கின்றேன். கடந்த காலங்களில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 175000.00 வழங்கி வந்தோம். தற்போது 350000.00 பெறுமதியான முத்திரையை செலவு செய்யலாம் என்று மாற்றம் செய்திருக்கின்றோம். அதேநேரம் மாகாண சப உறுப்பினருக்கு 24000.00 பெறுமதியான முத்திரைகளை வழங்கி வந்தோம். அதனை இன்று 48000.00 அதிகரித்துள்ளோம்.
இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரநிதி டில்வின் சில்வா தேர்தலை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட சலுகைகள் என்று கூறியிருந்தார். அது பிழையான கருத்தாகும். இந்த முத்திரைகளை அதிகரித்துத் தர வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தார்கள்.
இது ஒரு தேர்தலை இலக்காகக் கொண்டு செய்யும் விடயமல்ல. பொதுவாக அரச கருமங்களுக்காக மட்டுமே இந்த முத்திரை பயன்படுத்த முடியும். அவர்களுடைய தனிப்பட்ட வேலைகளுக்கு இந்த முத்திரை பயன்படுத்த முடியாது என்று அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் எமது நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தே மக்களுக்கு சேவைகள் புரிந்தோம். எனினும் துரதிருஷ்டவமாக சடுதியாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக தேசிய அரசங்கம் இல்லாமற் போய் விட்டது. தற்போது நாங்கள் தனி அரசாங்கம் என்ற வகையில் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றோம். தற்போது ஒரு அமைச்சரிடம் இரண்டுக்கும் மேற்பட்ட பல அமைச்சுக்கள் உள்ளன. அவற்றை செய்து கொள்வதில் சிரமங்களை அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். சில அமைச்சர்களை உருவாக்கி அந்த அமைச்சுப் பொறுப்புக்கள் அவர்களிடம் பகிர்ந்தளிக்கப்படுமானால் பொது மக்களுக்கு இலகுவானதொரு சிறந்த சேவையை மென் மேலும் பெற்றுக் கொடுக்க முடியும் எனவே இது பற்றி தப்பான விமசனர்ங்களை பரப்புவது தவறான கருத்தாகும் என்று முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியிலுள்ள அக்குறணை பூஜாப்பிட்டிய, ஹாரிஸ்பத்துவ மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகள்ள மதஸ்தலங்களுக்கு 3 கோ டி ரூபா நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது மூன்று குளங்கள் புனர் நிர்மாணம் செய்வதற்கு 20 இலட்சம் ரூபா, 350 உள்ளுர் வீதிகளின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக 15 கோடி 2 இலட்சத்து 50 ஆயிரம், 17 பாடசாலைகளின் மலசல கூட நிர்மாணப் பணிளுக்காக 88 இலட்சத்து 50 ஆயிரம், 13 பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக 78 இலட்சத்து 50 ஆயிரம் 5 சிறு பாலங்களின் புனர் நிர்மாணப் பணிகளுக்காக உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக மதிப்பீட்டு நிதி உதவிக்கான கடிதம் வழங்கி வைக்கப்பட்டடன.
இதில் சமயத் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |