Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தற்போது இலங்கையின் பல பிரதேசங்களை அச்சத்தில் உறையவைக்கும் பயங்கர உயிரினம்!

இலங்கையின் பல பிரதேசங்களில் மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட 02 அடி உயர உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாப பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் அனுராதபுர - மஹவிலச்சிய பிரதேச பெண்கள் தெரிவிக்கையில், நேற்றைய தினம் பற்றைக்குள் மறைந்திருந்த குள்ள மனிதர் தன்னை கீறிவிட்டு தப்பி சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அம்பாறை பிரதேசத்தில் விவசாயிகள் சிலரும் குள்ள மனிதரை கண்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது குறித்த பிரதேங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. அம்பாறை - தமன - நொட்டம பிரதேச விவசாயிகள் குள்ள மனிதர் இருப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்கள் நடமாடியமைக்கான ஆதாரமாக விசித்திரமான காலடித்தடங்களும் இருந்தன எனவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments