Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுதந்திர தின மேடையில் ரணில் தரப்புக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி!

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்குவதுடன் மாலைதீவு ஜனாதிபதியும் அவர்தம் பாரியாரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றதுடன் சிறிலங்காவின் தேசியக் கொடி ஏறலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன்போது பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதை முழுமையாக நிராகரிப்பதாக கூறினார். அத்துடன் முன்னர் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்துடன் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் குறிப்பிட்ட அவர்,
”கடந்த 2015இல் நாம் அமைத்த தேசிய அரசு செய்யக் கூடாததை செய்தது. ஆனால் செய்ய வேண்டியதை செய்யவில்லை. மக்களின் தேவை நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றம் இன்று கேலிப்பொருளாகியுள்ளது. துரதிஷ்ட சம்பவங்கள் நடக்கும் இடமாக அது மாறியுள்ளமை கவலைக்குரியது. தேசிய அரசு ஒன்றை அமைக்கப்போவதாக உடகங்களில் பேசப்படுகிறது. அது தேவைதானா? அதனை நான் நிராகரிக்கிறேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைச் சேர்த்து தேசிய அரசு அமைப்பது சரிதானா?” என காரசாரமாக பேசினார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரியின் பேச்சை உன்னிப்பாக கேட்டவண்னமிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments