Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலை!

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று 545 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும் ஆணையாளருமான துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களில் 27 பேர் வேறு வழக்குகள் தொடர்பில் மீண்டும் சிறைச்சாலைக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இன்று நாடளாவிய ரீதியில் 518 பேர் விடுதலை செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments