Advertisement

Responsive Advertisement

மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது

பட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி ,  இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை படைத்த பாடசாலையாக பட்டிருப்பு வலயத்தில் திகழ்கின்றமை குறிபப்பிடத்தக்க விடயமாகும். பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஒரே ஒரு தேசிய பாடசாலை இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இதனால் ஆசிரியர்களின் இடமாற்றங்களின் போது கல்வி அமைச்சுக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதில் பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். மட் /களுதாவளை மகா வித்தியாலயமானது
தேசியபாடசாலையாக தரமுயர்த்தப்படுகின்ற வேளையில் இப்பிரச்சினைகள் குறைவடையும் என்பது கண்கூடு. இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக

தரமுயர்த்துவதற்கு ஊர்மக்கள், பாடசாலைச் சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் களுதாவளை மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு அயராது தனது அற்பணிப்பான பணியினை மேற்கொண்டிருந்தார். அதன் பயனாக மட் /களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது.  இதற்கான உத்தியோக பூர்வ கடிதத்தினை சனிக்கிழமை  நடைபெற இருக்கும்  பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கும்  வேளையில் பாடசாலைச் சமூகத்தினடம் கையளிப்பார் என பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 75 மில்லியன் பெறுமதியான உள்ளக விளையாடரங்கம், வகுப்பறை கட்டிடம், மலசல கூடம் என்பவற்றுக்கு அடிக்கல் நடுவதற்கான நிகழ்வும் அன்றையதினம் இடம்பெறும்.


அத்துடன் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்துக்கு செல்லும் பிரதான பாதையை ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் புனரமைத்து செப்பனிட நடவடிக்கை எடுத்திருந்தார், குறித்த பிள்ளையார் ஆலய வீதியும் அன்றைய தினமே   திறந்து வைக்கப்பட உள்ளது.

மேலும் கல்முனை மற்றும் மட்டக்களப்பின் பல பாடசாலைகளுக்கும் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகளையும் அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.







இப்பாடசாலையானது தேசிய பாடசாலையாக தரமுயர்ந்து பல சாதனைகளை புரிய எமது www.kurunews.com  சார்பாக வாழ்த்துகின்றோம். 

Post a Comment

0 Comments