Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு அடித்த யோகம்!

பில் முச்சக்கரவண்டி சாரதிகள் நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் வேலை செய்கின்றனர்.அதில் அவர்கள் ஆறு மணிநேரம் வாடகைக்காக காத்திருக்கவேண்டியுள்ளது.
எனவே இந்த நேரத்துக்குள் அவர்கள் மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையிலேயே இந்த தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது.
“மூன்று சக்கரத்திலிருந்து நான்கு சக்கரங்கள்” என்ற தலைப்பில் இந்த பயிற்சிநெறி வழங்கப்படவுள்ளது. இதன்படி இந்த வருட இறுதிக்குள் ஒரு மில்லியன் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதன்படி இலத்திரனியல் உபகரணங்களை திருத்துதல், கைபேசி திருத்துதல், சிகையலங்காரம் ஆகிய தொழிற்பயிற்சிகளே வழங்கப்படவுள்ளன.
நுவரெலியா,மாத்தளை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த பயிற்சிநெறி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நைட்டாவின் கணக்கெடுப்பின்படி 1.2 மில்லியன் முச்சக்கரவண்டிகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments