Home » » ஆசிரியர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

ஆசிரியர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் உள்ள ஆசிரியர் சேவையில் ஏழு தொடக்கம் எட்டு சதவீதமானவர்கள் பொருத்தமற்றவர்களாக இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த கணிப்பு கல்வி அமைச்சின் ஆய்வறிக்கையிலிருந்து தெரியவந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி நாட்டிலுள்ள இரண்டு லட்சத்து 75 பேர்வரையில் உள்ள ஆசிரியர்களுள் ஏழு தொடக்கம் எட்டு சதவீதமானோர் அந்த பதவிக்கு பொருத்தமற்றவர்களாக இருப்பதாகவும், இந்த நிலையில் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அவர்கள் எவ்வாறான எண்ணம் கொண்டுள்ளனர் என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்காக நடத்தப்படும் பொது உளச்சார்பு மற்றும் பொது அறிவு போன்றன துறை சார்ந்த ஆசிரியர்களின் தகுதியைப் பரிசீலிப்பதற்கு பொருத்தமற்ற ஒன்றாக விளங்குவதாக கல்வியியலாளர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை துறை சார்ந்த அசிரியர்களைச் சேர்ப்பதற்காக நுண்ணறிவு மற்றும் பொது அறிவு போன்றவற்றை மட்டும் பரீட்சையாக நிகழ்த்தி ஆசிரியர்கள் சேர்க்கப்படுவதாலேயே துறைசார் தகுதியற்ற ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் ஏழு தொடக்கம் எட்டுச் சதவீதமான ஆசிரியர்கள் பதவிக்குப் பொருத்தமற்ரவர்கள் எனும் தகவல் கல்வித்துறை சார்ந்து அதிர்வலையினைத் தோற்றுவித்துள்ளதைக் காணலாம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |