Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வங்கி கணக்கு மீதி 1000 ரூபாவுக்கும் குறைவாக இருந்தால் 25 ரூபா கட்டணம்


சேமிப்பு கணக்குகளில் 1000 ரூபாவுக்கும் குறைவான இருப்புகள் தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் 25 ரூபா கட்டண கழிவை மேற்கொள்வதற்கு வங்கிகள் தீர்மானித்துள்ளன.

இவ்வாறாக 25 ரூபா கழிவுகளை மேற்கொண்டு 40 மாதங்களின் பின்னர் அந்த கணக்குகளை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு முன்னர் மேலதிக தொகைகளை வைப்பிலிடும் போது கணக்கை தொடரக் கூடியவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

1000 ரூபாவுக்கும் குறைவான இருப்புகளை கொண்ட கணக்குகளை நடத்திச் செல்வதில் காணப்படும் சிக்கல் நிலைமைகளை கருத்திற்கொண்டே வங்கிககள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்பபடுகின்றது. -(3)

Post a Comment

0 Comments