Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான லக் ரெகியா ஹரசர Excellent Performance ” தேசியவிருது

மட்டக்களப்பு மன்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகஸ்தராக கடமையாற்றும் உ. சுரேஸ்குமார் லக் ரெகியா ஹரசர செயற்றிறனுக்கான தேசிய விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவருக்கு இவ்விருது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சேவையை வழங்கியதற்காக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அனுசரணையுடன் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டடம் குருக்கள்மடத்தைச் சேர்ந்த இவர் கலைமாணி பட்டம் பெற்று பின்னர் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை டிப்ளோமாவை முடித்துவிட்டு சிறந்த சேவையை மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்கு ஆற்றிவருவதுடன் மட்டக்களப்பு  மாவட்டத்தின் சிறந்த தொழில் வழிகாட்டல் ஆலோசனை வலுவாளராகவும் தனது கடமையை சகல மாவட்டங்களுக்கும் வழங்கி வருகின்றார் 

Post a Comment

0 Comments