முல்லைத்தீவில் வெள்ளத்தினால், உடலில் கிருமி தொற்று ஏற்பட்டு சபாதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்திரகான் கௌஷியா என்ற 9 வயதுடைய சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுமி உடலில் கிருமி தொற்று ஏற்பட்டமையால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.அடைமழையின் போது பாதுகாப்பான இடம் நோக்கி செல்லும் போது மழையில் நனைந்தே சென்றுள்ளார். இதன் போது அவரது உடலில் கிருமி தொற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
|
0 Comments