சாரதிகள் வேகமாக வாகனங்கள் செலுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் ஏ9 வீதியில் வாவுனியா பகுதியில் பொலிஸார் வீதிகளில் நிற்பதை போன்று உருவ பொம்மைகளை வைத்துள்ளனர்.
இந்நிலையில் அதனை அவமதிக்கும் வகையில் குறித்த இளைஞர்கள் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுப்பதை போன்று வீடீயோக்களை எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரை அவமதித்தமை , மக்கள் மத்தியில் பொலிஸார் தொடர்பாக தவறான நிலைப்பாடுகளை கொண்டு செல்ல முயற்சித்தமை , இலஞ்சம் கொடுப்பதற்கு மக்களை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்ககள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். -(3)
0 Comments