வவுனியா – ஓமந்தை பொலிஸாரினால் போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்ற பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவரும் வாகனமொன்றும் கைப்பற்ற பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னான்டோவின் வழிநடத்தலில் கீழ் நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் கண்காணிப்பில், பொலிஸ் அத்தியட்சகர் ஜெனத் பொன்சேகாவின் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சேனாநாயக்கவின் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் இலங்க ரட்ண, வன்னிநாயக்க மற்றும் சமிந்த ஆகியோர் குறித்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments