Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை நியமனம், ஜனாதிபதியின் முடிவுகள் உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது அலசிஆராயப்படவுள்ளன.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை, ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவுசெய்யும் யோசனையும் முன்வைக்கப்படவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன ஐக்கிய தேசிய முன்னணி அரசில் பங்காளிகளாக அங்கம் வகிக்கின்றன.

Post a Comment

0 Comments