Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீள் குடியேற்றம் , புனர்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் ரணில்


மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி ஆகிய அமைச்சு பதவிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் அமைச்சுகளுக்கு மேலதிகமாக மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் தேசிய அரசாங்கத்தில் புனர்வாழ்வு , மீள் குடியேற்ற அமைச்சு பதவிகள் டீ.எம்.சுவாமிநாதனுக்கே வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இம்முறை அவருக்கு அமைச்சு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இதேவேளை நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ளோர் மீள்குடியேற்றம் தொடர்பான அமைச்சு பதவி ரிஷாத் பதியூதினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் மற்றும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ளோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுள்ளார். -(3)

Post a Comment

0 Comments