எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவைச் சமாளிப்பதற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
”உலகப் பொருளாதார நிலைமை மற்றும் தற்பொழுது இலங்கையில் உள்ள பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணத்தைப் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வழங்கக்கூடிய பொதுமக்களுக்கான ஆகக்கூடிய நிவாரணத்திற்கான விடயங்களும் இடைக்கால கணக்கு அறிக்கையில் உள்வாங்குமாறு பிரதமர் இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பல நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.” என்றார்.
இதேவேளை புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் இது பெப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்படுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
0 Comments