மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினால், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்த தான முகாம் நடைபெற்றுள்ளது.
நூற்றுக்கணக்கான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இரத்ததானம் செய்ததுடன் பொதுமக்களும் பெருமளவில் கலந்துக் கொண்டு இரத்த தானம் செய்துள்ளனர்.
இந்த இரத்தான முகாம் வருட இறுதி காலத்தில் நலன்புரி அமைப்பினால் முன்னெடுக்கப்படும் சமூக செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக நடாத்தப்பட்டுள்ளது என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாரிய இரத்த பற்றாக்குறை எதிர்நோக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் எம்.மிதுனா தெரிவித்துள்ளார்.
0 Comments