Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாவத்தை அனுபவிக்கிறாார் ரணில்!

மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே ரணில் விக்ரமசிங்க, தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று நாட்டு நிலைமை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அன்று மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை சிறையில் அடைந்திருந்தால் இன்று நாடும் நாட்டின் அரசியலும் நிலையாக இருக்கும். இவற்றை செய்யாதமையின் காரணமாகவே அவர்கள் தற்போது எவ்வித கட்டளைகளையும் பின்பற்றாமல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யவேண்டுமே அன்றி அட்டூழியம் செய்து ஆட்சியை பிடிக்க முற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments