மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஜனநாயக விரோதமான முறையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த வன்முறை சம்பவம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதைத் தடுப்பதற்காக பல வழிகளிலும் முயற்சிகளைச் செய்தனர். நாடாளுமன்ற அமர்வை நடத்தவிடாது சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு குழப்பம் விளைவித்தனர்.
நாட்டின் அரசியலமைப்பு மிகவும் முக்கியமான கௌரவத்துகுரிய ஆவனமாகவே பாதுகாக்கப்படுகின்றது. அதனைத் தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தினர்.
மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து என்மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா மீதும் தாக்கினார்கள். இது அவர்களின் அகோர தன்மையினையும் முழுமையான ஜனநாயக விரோத செயற்பாட்டையுமே வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.

0 Comments