Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தீயசக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலை நாட்டப்படுகின்ற நாளாக அமைய வேண்டும்! - சம்பந்தன்

தீய சக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலை நாட்டப்படுகின்ற ஒரு நாளாக இத் தீபாவளி அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்தச் சூழ் நிலையில், இந்த தீபத் திருநாளானது தீய சக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலை நாட்டப்படுகின்ற ஒரு நாளாக அமைவதோடு, எமது மக்கள் நிரந்தரமான சமாதானத்தையும் உண்மையான சுதந்திரத்தினையும் அடைய இந் நன்னாளில் பிரார்த்தனை செய்கிறேன். எமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் இடர்கள் நீங்கி வளம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக.
எமது மக்களும் இந்த நாடும் ஒரு சுபீட்ஷமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற இந்த நன்னாளில் இறைஞ்சுவோமாக" இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments