சபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின் கொள்கைகளிற்கு முரணான விடயம் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டெசெதர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்படும் அரசியல் சூழ்நிலை ஆழ்ந்த கவலையளிக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அமளி துமளி நிலவியவேளை பல வெளிநாட்டு தூதுவர்கள் பார்வையாளர்கள் பிரிவில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயகம் என்பது ஸ்தாபனங்களிற்கு மதிப்பளிப்பது என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments