நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்ற ஆரம்பித்ததும் சபையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டு இருதரப்பினருக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதையடுத்து, ஒன்றிணைந்த எதிரணியினர் சபா பீடத்திற்குச் சென்று சபாநாயகரை முற்றுகையிட்டு களேபரம் செய்தனர் இதனால் சபாநாயகர் ஒத்தி வைப்பு திகதி அறிவிக்காது ஆசனத்தை விட்டு எழுந்து வெளியேறியிருந்தார்.
ஆனாலும் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்படும் என கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் அறிவித்துள்ளார். இந்த கலவரத்தின் பின்னர் இலங்கை அரசியலில் நாடாளுமன்றில் இனிவரும் காலங்களில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படபோகின்றன என்ற ஓர் கலந்துரையாடல் எமது ஐ.பி.சி நேரலையில் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்..
0 Comments