Home » » இலங்கை விவகாரம் - ஜெனிவாவில் இன்று விவாதம்!

இலங்கை விவகாரம் - ஜெனிவாவில் இன்று விவாதம்!

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது. ‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்’ எனும் தலைப்பில் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை நாடாளுமன்றில் பல்வேறு ஜனநாயகம் மற்றும் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக வெளிநாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த விவாதத்தின் போது இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்ட விடயங்களால் பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இங்கு இடம்பெறவுள்ள விவாதத்தில் சிவில் சமூகத்தை சேந்தவர்களான நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசணைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து, அசங்க வெலிகல, மனித உரிமை செயற்பாட்டாளரான ஷிரீன் சரூர், மற்றும் அலன் கீனன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |