Home » » கல்முனையில் இந்து கோயிலை அகற்ற முயற்சி : தடுக்குமாறும் கோரிக்கை

கல்முனையில் இந்து கோயிலை அகற்ற முயற்சி : தடுக்குமாறும் கோரிக்கை

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்திலுள்ள இந்து கோயிலை அகற்றுமாறுகோரி தொடரப்பட்ட வழக்கை மீளப்பெறுமாறு கல்முனை மாநகரசபை மேயரிடம் இரண்டு பெண் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பேணும் வகையில் வழக்கினை திரும்ப பெறுமாறுஅவர்கள் கோரியுள்ளனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டுவரும்இந்து கோயில் அண்மையில் புனரமைப்பு செய்யப்பட்டது.
குறித்த இந்து கோயிலை அகற்றுமாறு கோரி கல்முனை நீதிமன்றில் கல்முனைமாநகரசபை மேயர் ஜனாப். றக்ஹீப் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதனால் பிரதேச தமிழ் மக்களிடம் கடும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளதுடன்வழக்கு விசாரணையும் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அம்பாறைகல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்திலுள்ள இந்து கோயிலை அகற்றுமாறு கோரி தொடரப்பட்டவழக்கை மீளப்பெறுமாறு கல்முனை மாநகர சபையில் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களானபுவனேஸ்வரி விநாயகமூர்த்தி, சுயேச்சை 2 கட்சி பிரதிநிதியானஅனஸ்ரி றாகல் செலஸ்ரினா ஆகியோர் இன்று கல்முனை மேயரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோயில் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இரண்டு இனங்களுக்கிடையில் விரிசலைஏற்படுத்துவதாக உள்ளது எனவும் இனங்களுக்கிடையில் நல்லுறவை பேணும்வகையில் அதிகாரிகள்செயற்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் கல்முனை மாநகர சபை மேயரினால் தொடரப்பட்ட வழக்கினை மீளப்பெறுவதால்இரு இனங்களுக்கிடையிலும் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும் என இரு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுஎழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கடிதத்தின் பிரதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், மற்றும் உப தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |