Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு



ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று காலை மட்டக்களப்பு தாழங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

முல்லைதீவு கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எம்.பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் கலாசாலையில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான முதலாம் பிரிவில் பயிற்சி பெற்றுவரும் ஆசிரியர், சம்பவதினமான இன்று வழமைபோல கலாசாலையில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் காலை 11 மணிக்கு விடப்பட்ட இடைவேளையில் குறித்த நபர் விடுதிக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த விடுதி அறையில் தங்கிருந்த மற்றொரு ஆசிரியர் கோப்பையொன்றை எடுக்க சென்றபோது, தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆசிரியரைக் கண்டு நிர்வாகத்திடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர்.

குறித்த ஆசிரியர் காதல் பிரச்சனையினால் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.
காதல் விவகாரம் : தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !!

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka

Post a Comment

0 Comments