முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள போதும் அரசியலமைப்புக்கமைய நானே உண்மையான பிரதமர் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அந்த பதவியில் இருப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
இதன்படி அலரிமாளிகையிலேயே தொடர்ந்தும் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராகவும் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காகவும் அலரிமாளிகையில் ரணிலின் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
நாளைய தினத்தில் கொழும்புக்கு பெருந்திரளான மக்களை அழைத்து வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவர் இன்று காலை 8 மணிக்குள் அலரிமாளிகையிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் இல்லையேல் நாங்கள் அதற்கான நடவடிக்கையை எடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)

0 comments: