Home » » தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டம்


ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை 26.10.2018 அன்று முன்னெடுத்திருந்தனர்.
அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் காலை 8 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டத்தில், சுமார் 300ற்கு மேற்பட்ட ஆசிரிய பயிலுநர்கள் கலந்து கொண்டனர். இதன்போது அவர்கள் சம்பள உயர்வை கோரும் வகையான பல வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும், இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரிய பயிலுநர்கள் தாம் இப்போராட்டத்தை முன்னெடுத்ததற்கான நோக்கம் குறித்து கூறுகையில்,
தொழிலாளர்களின் சம்பள உயர்வாக ஆயிரம் ரூபாவை கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவும், இவர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆதரவு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தோம் என்றனர்.IMG-20181026-WA0052IMG-20181026-WA0091
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |