Home » » தேசிய நூலக சபையின் மாகாண மட்ட விருதுக்கு கல்முனை நூலகம் தெரிவு

தேசிய நூலக சபையின் மாகாண மட்ட விருதுக்கு கல்முனை நூலகம் தெரிவு

தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் மாகாண மட்ட விருதுக்கு கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபைகளுக்குட்பட்ட பொது நூலகங்கள் மத்தியில், நூல்களை சிறந்த முறையில் பேணிப் பாதுகாத்தல் எனும் விடயத்தில் முதற்தர நூலகமாக கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலகம், தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் தெரிவு செய்யப்பட்டு, மேற்படி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 31ஆம் திகதி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ள தேசிய விருது வழங்கல் விழாவில் கல்முனை பொது நூலகத்திற்கான விருது வழங்கப்படவிருப்பதாக தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தவிசாளர் பி.எம்.தீபால் சந்திரபால அறிவித்துள்ளார்.

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலும் தமது நூலகத்திற்கு இந்த விருது கிடைக்கப் பெற்றதாகவும் இந்த ஆண்டு மூன்றாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலகத்தின் சிரேஷ்ட நூலகர் திருமதி சித்தி சபீனா சித்தீக் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதேவேளை கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலகம், தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் மாகாண மட்ட விருதுக்கு இம்முறையும் தெரிவு செய்யப்பட்டமைக்காக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுள்ளதுடன் அதன் சிரேஷ்ட நூலகர், உதவி நூலகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |