Advertisement

Responsive Advertisement

விசேட செய்தி: இலங்கையின் பிரதமராக தொடர்ந்தும் ரணில்! சபாநாயகர் அங்கீகாரம்!!


இலங்கையின் பிரதமருக்குரிய சகல அனுகூலங்களுடனும் ரணில் விக்ரமசிங்க நீடிப்பதற்கு சபாநாயகர் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பி வைத்த கடிதத்திலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்றின் அவைத் தலைவராக உள்ள தன்னிடம் எந்தவிதத்திலும் ஆலோசிக்கப்படாமல் நாடாளுமன்றை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்ததாக கடிதத்தில் சுட்டிக்காட்டிய அவர் ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்களை விலக்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் நாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் நவம்பர் 16 வரை ஒத்திவைத்தமை நாட்டில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துமென்பதால் அதுகுறித்து மறுபரிசீலணை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments