இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கவலையுடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டனியோ கட்டரஸ் அவதானித்து வருகின்றார் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கையில் சமீபத்தில் உருவாகியுள்ள நிலவரத்தை ஆழ்ந்த கவலையுடன் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார். அரசாங்கத்தை ஜனநாயக விழுமியங்களையும் அரசமைப்பு ஏற்பாடுகளையும் மதிக்குமாறும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஐ.நா செயலாளர் நாயகம் கேட்டுக்கொள்கின்றார். அனைத்து தரப்பினரையும் பொறுமையை கடைப்பிடிக்குமாறும் உருவாகி வரும் நிலவரத்திற்கு அமைதி தீர்வொன்றை காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் ஐ.நா செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார் என, ஸ்டீபனே துஜாரிக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
0 Comments